ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்:
“இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கார் நிறுத்தும் ஷெட்டின் வாசல் லைட்டை அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க”.
முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கார் நிறுத்தியுள்ள ஷெட்டின் ஷட்டர் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.
பெரியவர் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்தை ஃபோனில் அழைத்தார்: “ஹலோ......எனது முகவரியை எழுதிக் கொள்ளுங்கள். வீட்டில் நாங்கள் இரண்டு வயதான கணவன் மனைவி மட்டுமே இருக்கிறோம். இப்போது ஐந்து அல்லது ஆறு திருடர்கள் எங்கள் கார் நிறுத்தியுள்ள ஷெட்டின் ஷட்டர் கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீஸ் குழுவை சீக்கிரம் அனுப்புங்கள்.”
மறுபக்கத்திலிருந்து காவல் அதிகாரியின் குரல் வந்தது: “உங்கள் முகவரியை குறித்துக் கொண்டோம். எங்களிடம் தற்போது காவலர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஒரு போலீஸ் டீமுடன் தொடர்பு கொண்டவுடன், அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்.”
இதைக் கேட்டு, பெரியவர் ஏமாற்றம் அடைந்தார், ஆனால் மறுபுறம், ஷட்டர் கதவை உடைக்கும் பணியில் திருடர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பெரியவர் மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தார்: “அய்யா.....இப்போது யாரையும் அனுப்ப வேண்டியதில்லை. ஐந்து திருடர்களையும் சுட்டு விட்டேன்” என்று நிதானமாகக் கூறினார்.
போலீஸ் ஸ்டேஷனில் ஒரே பரபரப்பு. ஐந்து நிமிடங்களில், ஒரு போலீஸ் குழு, ஒரு ஹெலிகாப்டர், ஒரு துணை மருத்துவர், மூன்று டாக்டர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களுடன், முதியவரின் வீட்டை அடைந்தது.
ஐந்து திருடர்களும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் போலீஸ் குழுவின் தலைவர் பெரியவரை அணுகி கேட்டார், “நீங்கள் அந்த ஐந்து திருடர்களையும் சுட்டுக் கொன்றதாகச் சொன்னீர்கள், ஆனால் நாங்கள் அவர்களை உயிருடன் பிடித்துள்ளோமே?”
முதியவர் பதிலளித்தார்: “நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் போலீஸ் டீம் எதுவும் இல்லை என்று”.
மூத்த குடிமக்களின் அறிவாற்றலை என்றுமே குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்...
Author: Sudha Sundaram, D 307
உடலை பட்டினி போடப்படும் போது என்ன நடக்கிறது...?
உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி அவர்கள் 2016 ஆம் ஆண்டில் Auto phagy — உடல் தன்னையே உண்ணுதல் — பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசை வென்றார்.
உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கின்றன.
இந்த செயல்முறையில், உடலின் அனைத்து திசுக்களிலும் விசேட புரதங்கள் சுரந்து, இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து புதுப்பிக்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது நோயாளிகளை பட்டினிக்கு உட்படுத்தி “பட்டினி சிகிச்சை” அளித்து வருகின்றனர்.
Fasting அல்லது விரதம் இருப்பதால், நம் உடலுக்கு நாமே நல்ல சிகிச்சையை அளிக்கிறோம்.
Author: Sudha Sundaram, D 307
முடியாதென்று முடங்கிக் கிடப்பதைக் காட்டிலும்...!
முடியுமென்ற நம்பிக்கையோடு முன்னேறி நடந்திடலாம்...!
முன்னேறும் பாதை முட்கள் நிறைந்திருந்தாலும்...!
முகத்தில் புன்னகையும் அகத்தில் தன்னம்பிக்கையும் கொள்ள வேண்டும்...!
தோல்விக் கண்டாலும் துவண்டு போகாது...!
துணிவைத் துணையாக்கினால் தூணும் துரும்பாகிடும்...!
எடுக்கும் காரியங்களுக்கு தடுப்பு விழுந்தாலும்...!
எழுந்து நின்று வெற்றியை ருசித்திட வேண்டும்...!
கிடைக்கும் வெற்றியை தலையில் சுமந்திடாது...!
தன்னடக்கம் கொண்டு தன்மானத்தோடு இருந்திடல் நலம் பயக்கும்...!
Author: Sudha Sundaram, D 307
✈️ தெற்கு ஆஸ்திரேலியாவில் கூப்பர் பேடி என்றழைக்கப்படும் கிராமம் முழுவதுமே பூமிக்கு அடியில் தான் இருக்கிறது.
✈️ இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தும் காணப்படுகின்றது.
✈️ இந்த நிலத்தடி கிராமத்தில் இணைய வசதி கூட உள்ளதாம்.
✈️ இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தைப் பற்றி நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளம்.
✈️ பாலைவனமாக இருந்த இந்த கூப்பர் பேடி கிராமத்தில் சுரங்கப் பணிகள் 1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இது ஆரம்பத்தில் மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்கமாக இருந்தது.
✈️ இப்பகுதியில் சுரங்கங்கள் தோன்றிய பின்னர், மக்கள் காலியாக உள்ள சுரங்கங்களின் உள்ளே சென்று வாழத் தொடங்கியுள்ளனர்.
✈️ நாளடைவில் இங்கு காலத்திற்கு ஏற்ப தட்ப வெப்பநிலை சரியாக இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். கோடைக்காலத்தில் இங்கு வெப்பநிலை 45டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்று கூறப்படுகிறது.
✈️ அதன் காரணமாக வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பூமியைக் குடைந்து குடியேறியுள்ளனர்.
✈️ பூமிக்கு உள்ள குடியேறிய பின்னர் கோடை மற்றும் குளிர் காலங்களில் எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் தட்ப வெப்பநிலை சீராக இருப்பதாக கூறப்படுகின்றது.
✈️ இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
✈️ கூப்பர் பேடியின் கிராமத்தில் உள்ள நிலத்தடி வீடுகளுக்கு கோடையில் ஏ.சியோ அல்லது குளிர்காலத்தில் ஹீட்டர்களோ தேவைப்படுவது இல்லை.
✈️ இவர்களுக்கு தண்ணீர் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கிற பகுதியிலிருந்து குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
✈️ இது உலக அளவில் பேமஸ் ஆனதால், இங்கு பல ஹாலிவுட் படங்களும் படமாக்கப்பட்டுள்ளன.
✈️ கூப்பர் பேடி இப்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. மக்கள் இங்கு சுற்றுலாவிற்காக வந்து செல்கிறார்கள்.
✈️ சுற்றுலா மூலம் கூப்பர் பேடி கிராமம் கணிசமான வருவாயை ஈட்டுகிறது.
Author: Sudha Sundaram, D 307