Author: Sudha Sundaram 0
 24 views

Old Couples

ரொம்ப வயசான தம்பதி

தன் கடைக்கு நகை வாங்க வந்து இருக்கிறதை

சிசிடிவி கேமரால பார்த்தாரு முதலாளி. அந்தம்மா ஒவ்வொரு நகையா எடுக்குறதும், புருஷன்காரன் எதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டி கழிக்கிறதுமா இருந்ததை பார்த்தாரு.

ரெண்டு பேரும் அவ்வளவு அன்யோன்யமா இருந்ததை பார்த்து அவருக்கு என்னவோ அவங்க மேல interest வந்துச்சு. அந்த வயசான புருஷன் ஏன் இப்படி செய்யறான்னு தெரிஞ்சிக்க கடை ஊழியர் ஒருத்தரை அனுப்பி அவங்ககிட்ட விசாரிக்க சொன்னாரு முதலாளி. அவரும் போயி விசாரிச்சிட்டு வந்து,

சார்... அவங்க ரெண்டு பேருக்குமே 80 வயசுக்கு மேல ஆகுதாம். இத்தனை வருஷத்துல இது வரைக்கும் நகைநட்டு வாங்கினதே இல்லையாம். ஒரு நகைக் கடைக்கு வர்றது இதான் முதல் முறையாம்.

இப்ப 500 ரூபாய் எடுத்துட்டு வந்து 25 ஆயிரம் ரூபாய் நகையை பாக்குறாங்க. அவங்களை வேணும்னா, வெளிய அனுப்பிடவான்னு கேட்டாரு. இல்லல்ல ... இருன்னு நேரா அவங்ககிட்ட போன முதலாளி அந்த தம்பதி கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு

30 ஆயிரம் ரூபாய் நகையை அந்த பாட்டி கழுத்துல மாட்டிட்டு அய்யா... நீங்க

11 ரூபாய் மட்டும் குடுங்க. ஆண்டவன் புண்ணியத்தில் என்கிட்ட ஏராளமான நகை பணம் சொத்தெல்லாம் இருக்கு. ஆனா, என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வாதம் பண்ணத்தான் பெரியவங்க யாருமே இல்லைன்னு சொல்லி அழுதுருக்காரு.


இந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்த

உண்மை சம்பவம்!!!! 






Here is your Smart Chat (Ctrl+Space)