Author: Sudha Sundaram 0
 69 views

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

*உடம்பின் நடுப்பகுதி வயிறு.*

*அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.*

*இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,*

*நீங்கள் எப்படி இருப்பீர்களோ,* *அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.*

*தொந்தி கனக்க விடாதீர்கள்.*

*தொந்தரவு வரும்.*

*மனம் கனக்க* *விடாதீர்கள்*

*மரணம் வரும்.*

*ஒரு மனிதன்*

*வியாதியுடன்* *வாழப்போகிறானா,*

*வீரியமுடன் வாழப்போகிறானா,*

*நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா* *என்பதைத் தீர்மானிக்கும்* *வயதுதான்*

*இந்த நாற்பது.*

*நிறைய வேலை செய்வதால்*

*நமக்கு நிம்மதி போவதில்லை.*

*உடம்பு உருக்குலைவதில்லை.*

*என்ன நடக்குமோ என்ற*

*பயமும் கவலையும்தான்*

*மனிதன்மீது பாரமாக இறங்கி*

*அவனை நொறுக்கிவிடுகின்றன.*

*பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.*

*கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.*

*நிதானத்தைக் கடைபிடியுங்கள்.*

*ஆரவாரம் வேண்டாம்.*

*அலட்டிக் கொள்ளாதீர்கள்.*

*பொறுப்புக்களை*

*சீராக நிறைவேற்றுங்கள்.*

*அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.*

*அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.*

*தினசரி* *மத்தியானம்*

*ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.*

*இரவு பன்னிரண்டு மணிக்குமேல்*

*எக்காரணத்தை முன்னிட்டும்*

*விழித்திருக்காதீர்கள்.*

*பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.*

*அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.*

*ஆண்டவனை நினையுங்கள்.*

*இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.*

*நான் தப்பு பண்ண விடாதே அப்பா."*

*என்று வேண்டிக் கொள்ளுங்கள்.*

*முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.*

*கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.*

*டென்ஷன் இல்லாமல் இருங்கள்.*

*பென்ஷன் வாங்கலாம்.*

*ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,*

*அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.*

*அதனால்தான் சொல்லுகிறேன்.*

*கவலையைக் *கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !*

Regards,

Sudha Sundaram