சிந்திய குருதியும்
வேண்டிய அமைதியும்
பெற்றுள்ள செழுமையும் – மூவர்ணம்,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறும் எம் சரித்திரம்!
எமது நாட்டைப் ‘பரதேசி’ ஆழ்வதா?
பேதமே இங்கு தூளாச்சு,
அகிம்சைவழி இயலாச்சு,
குறுநிலம் கூடி நாடாச்சு,
சர்வாதிகாரம் போய் நாமே நம்மை ஆண்டாச்சு!
சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்,
அடிமைக் கோலத்தைக் கிழித்தெறிந்தோம்!
எனவே கர்ஜிப்போம் சுதந்திரமாய்:
“என் தேசியம் – இந்தியன்” என்று!
-இரா. ச. சம்யுக்தா.