ஸ்டீவ் ஜாப்ஸ்....
திருமணமாகாத இளம் காதலர்களுக்கு பிறந்த பையன்.
வளர்க்க வசதி இல்லாமல் அவரை ஒரு நடுத்தர குடும்பத்திற்கு தத்து கொடுக்கின்றனர் பெற்றோர்கள்.
படிப்பு ஏறவில்லை.
ஆன்மீகப் பக்கம் செல்லலாம் என எண்ணி இந்தியாவிற்கு வந்து ஆன்மீகம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
பின்னர் ஆன்மீகமும் பிடிக்கவில்லை வாழ்க்கையில் நிலை தடுமாறுகிறார். என்ன செய்வதென்று புரியவில்லை. நடுவில் இரு வருடங்கள் காலம் வீணாக கழிகிறது.
பின்னர் 100 டாலருடன் நண்பருடன் சேர்ந்து ஒரு கார் கராஜில் உட்கார்ந்து ஆப்பிள் கம்பெனியை ஆரம்பிக்கின்றார்.
ஒவ்வொரு இடங்களுக்கும் தன்னுடைய கணணியை விளம்பரப்படுத்த செல்கிறார்.
செல்லும் இடமெல்லாம் நிராகரிப்பு. தொடர்ந்து தோல்வி.
முதலீடு செய்ய யாரும் இல்லை. பின்னர் ஒருவர் முதலீடு செய்ய வருகிறார்.
ஆப்பிள் கம்ப்யூட்டர் சந்தைக்கு வருகிறது.
பயங்கரமான சக்சஸ் எல்லாவிடத்திலும் ஆப்பிள் ஆப்பிள் என்ற நாமமே ஒலிக்கிறது.
பின்னர் கம்பெனியில் ஏதோ பிரச்சினை ஸடீவ் ஜாப்சை வெளியில் அனுப்புகிறார்கள்.
மறுபடியும் தோல்வி.
Next என்று ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிறார் 12 வருடம் கழித்து அப்பிள் நிறுவனம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலைக்கு வருகிறது. மறுபடியும் ஸ்டீவ் ஜாப்ஸை அழைக்கிறார்கள்.
ஆப்பிள் ஐபோன் லான்ச் ஆகிறது.
ஆப்பிள் II, மேகிண்டோஷ், ஐபாட், ஐபோன், ஐடியூன்ஸ் போன்ற புரட்சிகர தயாரிப்புகள் சந்தைக்கு வருகின்றன.
சொல்லவே வேண்டாம்.
இன்றைய காலகட்டத்தில் ஐபோன் மெக்புக் இருந்தால் அது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் என்ற நிலைக்கு ஆப்பிள் என்ற பிராண்ட் வளர்ந்து இருக்கிறது.
கற்பனை செய்து பாருங்கள் ஒவ்வொருவரின் கரங்களிலும் இன்று ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கிறார்.
கையில் 100 டாலருடன் தொழிலை ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் 2011 ல் புற்றுநோயால் இறக்கிறார்.
அவர் இறக்கையில் அவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 72600 கோடி ரூபாய்.
அவருடைய பிரபலமான வாசகம். 'Stay Hungry, stay foolish. (பசியுடன் இரு. முட்டாளாக இரு.)
உங்கள் கனவுகளை நோக்கி செல்லுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்று கவலை படாதீர்கள்.