Author: Sudha Sundaram 0
 17 views

Kali Powder

உளுந்தங்களி உடலுக்கு, குறிப்பாக இடுப்பு எலும்பிற்கு வலுவூட்டும் ஒரு சிறந்த பாரம்பரிய உணவு. இந்த மாவை (Kali Powder) முன்பே செய்து வைத்துக்கொண்டால், தேவையான நேரத்தில் எளிதாக களி செய்யலாம்.


தேவையான பொருட்கள்


✍️ கருப்பு உளுந்து – 2 கப் (தோலுடன் இருப்பது அதிக சத்து தரும்)

✍️ பச்சரிசி – 1/4 கப் (களி மென்மையாக வர உதவும்)

✍️ சுக்கு – ஒரு சிறிய துண்டு (செரிமானத்திற்கு நல்லது)

✍️ ஏலக்காய் – 4–5 (நல்ல மணத்திற்கு)



செய்முறை (உளுந்து மாவு பொடி)


✍️ ஒரு கனமான வாணலியில் கருப்பு உளுந்தை சேர்த்து மிதமான தீயில் (Medium flame) வறுக்கவும்.

✍️ நல்ல மணம் வரும் வரை சிவக்க வறுக்க வேண்டும். கருகிவிடாமல் கவனிக்கவும்.

✍️ அதேபோல் பச்சரிசியையும் தனியாக வறுத்து பொரியும் வரை வறுக்கவும்.


✍️ சுக்கை லேசாகத் தட்டி, அதைச் சற்று சூடுபடுத்தவும்.

✍️ ஏலக்காயையும் லேசாக வறுத்து எடுக்கவும்.


✍️ வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவிடவும்.

✍️ ஆறியதும் மிக்ஸி அல்லது மில்லில் நைசாக (Fine powder) அரைக்கவும்.

✍️ அரைத்த மாவை ஒரு சல்லடையால் சலித்து எடுத்தால் மென்மையாக இருக்கும்.



களி கிண்டும் முறை (சுருக்கமாக)


✍️ 1 பங்கு மாவுக்கு 2– 3பங்கு தண்ணீர் என்ற அளவில் எடுத்துக் கொள்ளவும்.

✍️ கருப்பட்டி / வெல்லம் தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

✍️ பாகு கொதிக்கும்போது அடுப்பை சிம்மில் வைத்து மாவை கட்டியில்லாமல் மெதுவாக கிளறவும்.

✍️ கடைசியாக தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து, மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். 


Regards,

Sudha Sundaram